விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘நான் வரவா தனியா..’ என்ற முதல் பாடல் விஜய் குரலில் வெளியானது.
பாடலில் வரும் சில வரிகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா “அந்த பாடல் முழுவதும், ‘புகைப்பிடித்தால் பவர் கிடைக்குது; மில்லி உள்ள போன கில்லி வெளிய வரும்’ என மது மற்றும் புகைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகள் உள்ளன.
இது பொறுக்கித்தனமான பாட்டு. குழந்தைகள், சிறுவர்களைக் கெடுக்கும் இந்த பாடலை பாடுகிறார் விஜய். என்ன மண்ணாங்கட்டிக்கு பொதுநலம் குறித்து மாணவர்களுக்கு விருது கொடுக்கிறார். சிகரெட்டை புரமோஷன் பண்ண விஜய் எத்தனை கோடி வாங்குனாருன்னு இந்த இளைஞர்களுக்கு தெரியுமா?
விரலுக்கு இடையில் தீப்பந்தம் என்று பாடுகிறார். இதை எழுதினவர், அசல் முழு கோளாறான ஆளு. இந்த மாதிரி கீழ்த்தனமான வரிகளை விஜய் எப்படி பாடுகிறார்?
சர்கார் படத்தில் முதல் காட்சியே சிகரெட் வச்சித்து இருந்ததற்கு நாள் எதிர்ப்பு தெரிவித்தேன். அதன்பிறகு வாயில சிகரெட் வச்சி நடிக்க மாட்டேனு சொன்னாரு ஆனால் இப்போது இந்த பாடல் முழுவதும் சிகரெட்டுடன் வருகிறார்.
இதை பார்த்து ஒரே ஒரு இளைஞனோ, ஒரு பள்ளி மாணவனோ வீணா போனா அதற்கு விஜய் பொறுப்பேற்பாரா? இந்த பாடலுக்கு எதிராக வழக்கு தொடர போகிறேன்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.