Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அவர் இப்போது தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ரஜினி இல்லாத காட்சியில் மேலும் சில நாட்கள் அங்கு நடைபெற உள்ளது. இரண்டு ஹீரோக்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோருக்கு வழிகாட்டும் மொய்தீன் பாய் என்ற சக்திவாய்ந்த முஸ்லீம் கேரக்டரில் ரஜினி நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பழம்பெரும் நடிகை ஜீவிதா பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார்.

- Advertisement -

Read more

Local News