Friday, September 20, 2024

“போதைப் பொருள் கடத்திலில் நானா..?!”: நடிகை அதிர்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி.  ரஜினியின் கபாலி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டவர்.

சமீபத்தில் இவர், கோவாவில் இருந்து போதைப் பொருள்களை வாங்கி ஹைதராபாத்துக்கு  கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.

நைஜீரியாவை சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

டோலிவுட்  பிரபலங்கள் பலருக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாகவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.இந்நிலையில் கே.பி. சவுத்ரியுடன் நடிகை சுரேகா வாணி நெருக்கமாக இருக்கும் போட்டோ, சமூகவலைதளத்தில் பரவரியது. இதையடுத்து இவருக்கும் போதை கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. மேலும், நடிகைகள் ஜோதி,  அஷூ ரெட்டி ஆகியோர் பெயரும் அடிபடுகிறது.

இந்த நிலையில், அஷூ ரெட்டி, “ போதை கடத்தல் வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை. தேவையில்லாமல் சிலர் என் பெயரை இழுத்து விடுகிறார்கள்…” என்ரு காட்டமாக தெரிவித்து உள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News