Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“இதையெல்லாம் தடை செய்யுங்க!”:  முதல்வருக்கு  இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீனு ராமசாமி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

கடந்த சில ஆண்டுகளாகவே சாதிகளின் பெருமை சொல்லும் பாடல்கள் அதிகரித்து வருகிறது என்பதும் இதனால் ஒரு சில இடங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த கோரிக்கையில் ’தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை பொது ஒலிபெருக்கியில், பொது இடத்தில் ஒலிபரப்ப தடை விதிக்க வேண்டும் .

மேலும் எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் ஜாதி துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை, தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று  கூறியுள்ளார்

இயக்குனர் சீனு ராமசாமியின் இந்த கோரிக்கைக்கு சமூக வலைதளத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

 

- Advertisement -

Read more

Local News