ஹீரோயின்களிடையே ஈகோ இருந்தாலும் அவசர நேரத்தில் உதவுபவரும் உண்டு. அப்படியோர் சம்பவத்தை, பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் தெரிவித்தார்.
“பழம்பெரும் நடிகைகள் சாவித்ரி, சரோஜா தேவி இருவரும், ஒரே படத்தில் நடித்தாலும் பேசிக்கொள்ள மாட்டார்கள். காட்சி முடிந்ததும் ஆளுக்கொரு ஒரு பக்க ம் போய் அமர்ந்துகொள்வார்கள்.
ஆனால் தரக்குறைவான விமர்சனங்களை மற்றும் தடித்த வார்த்தைகள் இல்லாமல் தங்களுக்குள் ஓரளவு நட்பு கலந்த ஈகோவுடனே இருந்தனர்.
மறக்க முடியாத ஒரு சம்பம்…
சாவித்ரி கடைசி காலத்தில் சர்க்கரை நோயால் பீடிக்கப்பட்டு இருந்தார். ஒரு படப்பிடிப்புக்கு பெங்களூருவில், சாளுக்கிய ஓட்டலில் தங்கினார்.
ஒரு நாள் திடீரென,மயங்கி விழுந்துவிட்டார். ஓட்டல் நிர்வாகத்தினர் சரோஜாதேவியை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்கள்.
சரோஜா தேவி உடனடியாக அப்போதைய கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவை தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார். இதையடுத்து சாவித்திரி தனி விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டார். இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
போட்டி நடிகையாக இருந்தாலும், ஈகோ இருந்தாலும் ஆபத்து காலத்தில் உதவும் குணம் இருந்தது” என்றார் சித்ரா லட்சுமணன்