Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்!: டாப்சி காட்டம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தி திரையுலகில் நடிகர் நடிகைகளை பாரபட்சமாக நடத்துவதாக ஏற்கனவே சர்ச்சைகள் உள்ளன. வாரிசு நடிகர் நடிகைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்பட்டது.

நடிகை பிரியங்கா சோப்ராவும் தன்னை இந்தியில் இருந்து ஒதுக்கியதால் ஹாலிவுட் சென்றேன் என்று கூறியிருந்தார். வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினாலேயே மன உளைச்சலில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி இருந்தார். தற்போது டாப்சியும் இந்தி திரையுலக அரசியலை சாடி உள்ளார்.

இதுகுறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், “இந்தியில் நடிகர் நடிகைகளை பாரபட்சமாக நடத்துவது புதிய விஷயம் இல்லை. இங்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று பிரித்து பார்க்கும் நிலைமை இருக்கிறது. நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு இது தெரியும். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். சாதகமான நிலைமைகள் இல்லையென்றாலும் தொடர்ந்து சினிமாவில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவரவர் விருப்பம். வளர்ந்து விட்டால் யாரும் வெளியேற்ற முடியாது” என்றார்.

- Advertisement -

Read more

Local News