‘பாலம்’ற படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து திரையுலகில் கால்பதித்தவர் பாலாம்பிகை. தொடர்ந்து, ‘நடிகன்’ படத்தில் குஷ்புவுக்கு தங்கையாகவும், ‘பாட்டுக்கு ஒரு தலைவன்’ படத்தில் விஜயகாந்த்துக்கு தங்கையாகவும், ‘திருமதி பழனிச்சாமி’ படத்தில் சத்யராஜுக்கு தங்கையாகவும் நடித்து பிரபலமானார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “விஜய், அஜித், கமல், பிரசாந்த் உள்ளிட்டோர்களின் படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்தன. ஆனால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யச் சொன்னார்கள்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. அட்ஜஸ்ட்மெண்ட் கேட்காமல் அந்த பட வாய்ப்புகள் வந்திருந்தால், முன்னணி ஹீரோயினாக இருந்திருப்பேன்” என்று தெரிவித்து உள்ளார்.