ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து நேற்று முன்தினம் (ஜூன் 16) உலகம் முழுவதும் வெளியானது.
படத்தில், “சீதா இந்தியாவின் மகள்” என குறிப்பிட்டு இருந்தது. இது நேபாள நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தியது.
“சீதாதேவி பிறந்தது நேபாளத்தில்தான். ஆனால் படத்தில் இந்தியா என குறிப்பிட்டு உள்ளது. இந்த வசனத்தை நீக்கினால்தான் சென்சார் சான்றிதழ் அளிக்க முடியும்” என நேபாள அரசு தெரிவித்தது.
இதையடுத்து அந்த வசனத்தை படக்குழு நீக்கியது.
ஆனாலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அந்நாட்டில் ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.