Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

அஞ்சலி செலுத்தக்கூட வராத வடிவேலு!: காமெடி நடிகர் உருக்கம்.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாவா லட்சுமணன். இவர் பெரும்பாலும் வடிவேலு காம்பினேஷனில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “வடிவேலு பலருடைய மனதை காயப்படுத்தி இருக்கிறார். அவருடைய அலுவலகத்திற்கு சென்றாலே முகத்தில் அடித்தது போல் பேசுவார்.

தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற நடிகர் வடிவேலுவா  விவேக்கா  என்று கேட்டால் நான் விவேக் தான் சொல்லுவேன். காரணம், சொன்ன நேரத்தில் சூட்டிங்க்கு வருவது தான் அவருடைய வழக்கம்.  அது  வடிவேலிடம் கிடையாது

அல்வா வாசு மதுரையில் இறந்தார். மதுரையில் இருந்தும் துக்கத்துக்கு வடிவேலு செல்லவில்லை. நான் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் நபர்களில் வடிவேலு ஒருவர். அவர் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

Read more

Local News