அரசியலில் மட்டுமின்றி, நாடகம், திரைத்துறையிலும் கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு நினைவாற்றல் அதிகம்.
ஆரம்ப காலகட்டத்தில் கலைஞர் நாடகத்தில் நடித்த போது அவருடன் எம் ஆர் ராதாவும் நடித்துள்ளார். அந்த சமயத்தில் தான் பெரியார் மற்றும் அண்ணா பிளவு ஏற்பட்டுள்ளது. எம்ஆர் ராதா பெரியாரின் தீவிர ரசிகர். கலைஞர், அண்ணா உறவு பற்றி அனைவரும் அறிந்தது தான்.
அந்தச் சமயத்தில் அண்ணாவின் தொண்டர்கள் அவரை தளபதி என்று அழைப்பது வழக்கமாக இருந்தது. அப்போது மேடையில் எம்ஆர் ராதா திடீரென, “தளபதி என்று கோஷமிடுகிறீர்களே! உங்களுடைய தளபதி என்ன போர்க்களத்திற்கு சென்று வந்தாரா” என நக்கலுடன் கேட்டார். இது ஸ்கிரிப்படில் இல்லாத வசனம்.
ஆனாலும் உடனே கருணாநிதி, “உரைக்குள் இருந்தாலும் அதன் பெயர் வாள் தான், அதேபோல் தான் போர்க்களத்திற்கு செல்லாவிட்டாலும் எங்களுக்கு அவர் தளபதி தான்” என்று கூறினார்.
இப்படி விநாடிக்குள் யோசித்து பதிலடி கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.