கடந்த சில ஆண்டுகளாக ஜீ டிவியில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார். இதில் சமுதாயத்தில் நடக்கும் பல விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி இது.
இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இது குறித்து கரு பழனியப்பன் தனது சமூக வலைதளத்தில் திராவிட கருத்துக்களை பேச முடியாத தளத்தில்தான் தொடர்ந்து பணியாற்ற விரும்பவில்லை என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவரது புதிய நிகழ்ச்சி கலைஞர் டிவியில் கடந்த 11ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ‘வா தமிழா வா’ என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த விவாத நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி முதல் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும்.
“முதல் நிகழ்ச்சியே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என கரு.பழனியப்பன் தெரிவித்து உள்ளார்.