கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அறிமுக இயக்குநர் ரமேஷ் உருவாக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – இவானா ஜோடியாக நடிக்கும் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்ற படம் தமிழில் தயாராகிறது.
படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். கேரளாவைச் சேர்ந்த விஸ்வஜித் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று அண்மையில் முடிந்தது.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை இன்று (ஜூன்7) னி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.