Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

சர்வதேச விருது பெற்ற ‘இராவண கோட்டம்’:  ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்ததோடு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படம், இராவண கோட்டம்.   கண்ணன் ரவி தயாரிப்பில், சாந்தனு நாயகனாக நடித்தார்.

படத்தில், சாதி கலவரங்களின் பின்னணியில் உள்ள ஆதாய அரசியலையும் அதன் சூட்சுமம் அறியாமல், ஈசலாக அதில் விழும் அப்பாவி மனிதர்களின் அறியா இயல்பையும் சிறப்பாக சொல்லி இருந்தார், இயக்குநர் விக்ரம் சுகுமாரன். மேலும், கருவேல மர ஒழிப்பின் அரசியல் சிக்கல்களையும் பேசியிருந்தார்.இவரது இயக்கத்தை பாராட்டி, ரோனியா நாட்டில் நடைபெற்ற ‘கிழக்கு ஐரோப்பிய திரைப்பட விழாவில்’ இராவண கோட்டம் திரைப்படத்துக்காக அவருக்கு ‘சிறந்த இயக்குநர்’ விருது கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 16ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News