Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘வீரன்’ படக்கதை காப்பியா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஆதிரா ராஜ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘வீரன்’.  , மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் ‘வீரன்’ திரைப்படம் மலையாளத்தில் பசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘மின்னல் முரளி’ படத்தின் காப்பி  என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர்.

தற்போது படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், படத்தின் இயக்குனர், ‘மின்னல்’ முரளி இயக்குனர் பசில் ஜோசப்புக்கு நேரடியாக வீடியோ கால் செய்து  விளக்கம் அளிப்பதும், பதிலுக்கு அவரும், வீரன் படம் காப்பி இல்லை என்று கூறுவதும் இடம் பெற்று உள்ளன.

ஜாலியாக உருவாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News