நடிகர் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. அவை வெற்றி பெறவம், ரஜினி நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழவும் இறைவன் அருள் புரிய வேண்டம்.
மற்றபடி அரசியலுக்கு வருவதில்லை என அவரே சொல்லிவிட்டார். தவிர அவருக்கு வயதாகிவிட்டது அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை” என்று கூறினார்.
கர்நாடகாவில் வசிக்கும் சத்யநாராயண ராவ் அவ்வப்போது தமிழ்நாட்டு கோயில்களுக்கு வருவார். அப்போதெல்லாம், “விரைவில் ரஜினி அரசியலுக்கு வருவார்.. ஆறு மாதத்தில் வருவார்.. முதலமைச்சர் ஆவார்..” என்றெல்லாம் பேட்டி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.