பத்திரிகையாளர் செல்வா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்த சுவாரஸ்யமான தகவல்:
“அமராவதி படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. ப் படத்தின் ‘புத்தம் புது மலரே…’ பாடலைப் படமாக்க அஜித், சங்கவி என யூனிட் காத்திருந்தது. அப்போது திடீரென ‘திருடா திருடா’ பட யூனிட் அங்கு வந்து இறங்கியது. மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், பிரசாந்த் என ‘லைம்லைட்’ பிரபலங்களைப் பார்த்ததும் ‘அமராவதி’ யூனிட்டே அவர்களை நோக்கி ஓடியது. அஜித் செல்லவில்லை. அவர் அருகில் அமர்ந்து இருந்த ஒருவரும் செல்லவில்லை. ‘ஏன் நீங்க ஆட்டோகிராப் வாங்க போகலையா?’ என அஜித் அவரிடம் கேட்க, ‘இல்லை. நான் ஃப்யூச்சர் ஸ்டார்கூட உட்கார்ந்திருக்கேன்’ என்றார் அவர். பெயர் சுரேஷ் சந்திரா. அவர்தான் அப்போது முதல் இப்போது வரை அஜித் மேனேஜர்!