விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இப்படம் கடந்த 12 ஆம் தேதி இங்கிலாந்தில் இந்தி மற்றும் தமிழில் வெளியாக இருந்தது. ஆனால் அந்நாட்டில் தணிக்கை குழு சான்றிதழை வழங்காததால் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.
பிறகு பெரும் போராட்டத்துக்குப் பிறகு நேற்று முதல் அங்கு வெளியாகிறது.
குறித்து இயக்குநர் சுதிப்தோ சென், “பிரிட்டன் வென்றுவிட்டது. பயங்கரவாதம் தோற்றது. இப்போது பிரிட்டிஷ் மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான மிகப்பெரிய புரட்சியைப் பார்ப்பார்கள்” என ட்விட்டரில் பதிவிட்ட உள்ளார்.