Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

இப்படியும் ஒரு கவர்ச்சி ஆடையா?: அதிர வைத்த உர்பி ஜாவித்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இந்தி நடிகை உர்பி ஜாவேத்,  வித்தியாசமான கவர்ச்சி ஆடைகளுக்காக பிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து படு கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிடுவார். இதனஆல் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். அவர் மீது போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1 அன்று, “நான் அணிந்த ஆடைகளின் மூலம் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் வேறு உர்பியை பார்ப்பீர்கள்” என ட்வீட் மூலம் தெரிவித்தார்.

மறுநாளே, “ஏப்ரல் 1 – முட்டாள்கள் தினத்தக்காக அப்படி பதிவிட்டேன்” என்றார்.

இந்த நிலையில் எதிர்ப்பாளர்களை மேலும் வெறுப்பேற்றும்படி வீடியோ ஒன்றை  வெளியிட்டு உள்ளார்.

அதில், பெரிய தடுப்பு போன்ற உடையை அணிந்துள்ள உர்பி ஜாவேத், வழக்கமான முறையில் டீ குடிக்க முடியாமல் சிரமப்படுகிறார். பின்னர்  சற்று வலப்புறம் முகத்தை திருப்பிய ஜாவேத், கையில் வைத்திருந்த டீயை குடிக்கிறார்.

ஆக.. தனது கவர்ச்சி மூடில் இருந்து அவர் வெளிவரமாட்டார் என்பது உறுதி.

- Advertisement -

Read more

Local News