இயக்குநர் பாலா – நடிகர் விக்ரம் இடையேயான நட்பு குறித்து பத்திரிகையாளர் செல்வம் வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
“வித்கமுக்கு தொடர்ந்து தோல்வி படங்களே அமைந்த நிலையில், பாலா இயக்குனராக அறிமுகமாகிய சேது படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு சில பிரச்சினைகளால் நின்றது.
ஆகவே விக்ரம், நடிகை ராதிகா தயாரித்த சீரியலில் நடிக்க சென்று விட்டார். அதற்காக ரூ. 60,000 சம்பளம் கிடைத்தது.
அப்பொழுது பாலா வறுமையில் இருந்தார். ஆகவே, விக்ரம் ராதிகா விடம் வாங்கிய சம்பளத்தில் இருந்து பாலாவிற்கு 30,000 கொடுத்து உதவினார். அந்த அளவிற்கு இவர்கள் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்” என பத்திரிகையாளர் செல்வம் கூறியிருக்கிறார்.