Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஆறு பிரல இயக்குநர்களின் ஓ.டி.டி. கதைகள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் ‘மாடர்ன் லவ்’. இத்தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் – மும்பை’, ’மாடர்ன் லவ் – ஹைதராபாத்’ ஆகியனவும் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில்,’மாடர்ன் லவ் – சென்னை’ சீரிஸ், வரும் மே 18ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

இத்தொடரில் ஆறு பேர இயக்கும் கதைகள்  இடம்பெற்றுள்ளன.

ராஜு முருகன் இயக்கிய ‘லாலாகுண்டா பொம்மைகள்’ கதைக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி, மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘இமைகள்’ தொடருக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அசோக் செல்வன், மற்றும் டி.ஜே.பானு ஆகியோர் நடித்துள்ளனர்.

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கிய ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி’  அத்தியாயத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.   ரிதுவர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ் மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அக்‌ஷய் சுந்தர் இயக்கியுள்ள ‘மார்கழி’ இயக்கியுள்ள கதைக்கு  இளையராஜா இசையமைத்துள்ளார். சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாரதிராஜா இயக்கியிருக்கும் ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’  அத்தியாயத்துக்கு  இளையராஜா இசையமைத்துள்ளார்.  அத்தியாயத்தில் கிஷோர், ரம்யா நம்பீசன் மற்றும் விஜயலக்‌ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ‘நினைவோ ஒரு பறவை’ அத்தியாயத்துக்கு  இளையராஜாவே இசையமைத்துள்ளார்.  வாமிகா மற்றும் பீபி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடையே இத்தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

- Advertisement -

Read more

Local News