Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

டிரான்ஸ்பரென்ட் உடையில் நடிகை! எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அந்தக் காலத்தில் சூப்பர் ஸ்டாராக திரையுலகில் கோலோச்சியவர் எம்ஜிஆர். அவர், படப்பிடிப்பில் இருந்தால் இயக்குனர்கள் முதல் தயாரிப்பாளர்கள் நின்று கொண்டு தான் இருப்பார்கள்.  அந்த அளவுக்குஎம்ஜிஆருக்கு ஏகபோக மரியாதை இருக்கும்.

பணம் படைத்தவன் என்ற படத்தில் கண் போன போக்கிலே பாடலை படமாக்கும் நேரம்.  ஆடுவதற்காக சௌகார் ஜானகி வந்துள்ளார். அப்போது காஸ்ட்யூம் டிசைனர் சௌகார் ஜானகிக்கு உடல் தெரிகிற மாதிரி டிரான்ஸ்பரென்ட் உடைய கொடுத்துள்ளார். அப்போது எம்ஜிஆர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டார். அதாவது இந்த உடை கண்ணாடி போல் இருக்கிறது, உங்களுக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது வேறு உடையை மாற்ற சொல்லுங்கள் என சௌகார் ஜானகியிடம் கூறியுள்ளார். பிறகு அவர் வேறு உடை அணிந்து வந்த பிறகு தான் அந்தப் பாடல் படமாக்கப்பட்டது. இதை மிகவும் பெருமையாக சௌகார் ஜானகி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும், “எம்ஜிஆர் உடன் நிறைய நடிகைகள் கவர்ச்சி உடை அணிந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய பெயருக்கு  களங்கம் வரக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் அவ்வாறு சொன்னது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது”  என்றும் சௌகார் ஜானகி பேசி இருந்தார்.

- Advertisement -

Read more

Local News