Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

ஆந்திராவில் ரஜினியை கொண்டாடிய என்.டி.ஆர் குடும்பம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராகவும், தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி ஆந்திராவின் முதல்வராகவும் இருந்தவர் என.டி.ராமாராவ். சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள என்.டி.ஆர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மற்றும் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்தார்.

இந்நிலையில் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்த அவரது குடும்பம் இதற்காக பிரம்மாண் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டை என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா கவனித்துக்கொண்டார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார்.அதன்படி என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆந்திராவின் விஜயவாடாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் என்.டி.ஆர் மருமகன் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு என்.டி.ஆர் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், என்.டி.ஆர் மகள், ‘தலைவா, வணக்கம்… நன்றி! என்று கூறி ரஜினிகாந்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News