Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘அரசியலுக்கு வரவேமாட்டேன்!’:  வைரலாகும் விஜய் வீடியோ

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள விஜய், அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அவரது விஜய் மக்கள் இயக்கம்,  உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. சமீபத்தில், அம்பேதக்கர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்துங்கள் என விஜய் கூறியது கவனத்தை ஈர்த்தது.

இந்தநிலையில், நான் அரசியலுக்கு வர மாட்டேன் என அவர் கூறிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துருக்காங்க, எதிர்காலத்தில் நீங்க அரசியலுக்கு வருவீங்களா? அந்த எண்ணம் இருக்கா? என்ற கேள்விக்கு, நிச்சயமான இல்லை அப்படிங்கிறதுதான் என் பதில். எனக்கு அரசியல்னா என்னனே தெரியாது. நான் கண்டிப்பா வரமாட்டேன்” என்று விஜய் கூறி இருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News