Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

கமல்ஹாசன் ரூ30,000 சம்பளம் வாங்கின படத்துல ரஜினி சம்பளம் ரூ2000!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பேசிய பழைய வீடியோ ஒன்று திடீரென சமூகவலைத்தில் வைரலாகி வருகிறது.

அதில்  அவர்,   “’மூன்று முடிச்சு’ படத்தின்போது, கமல்ஹாசன் ஏற்கனவே பெரிய நடிகராக பிரபலமாகி இருந்தார். நான் புதுமுகம், ரஜினியும் புதுமுகம் தான். கமலஹாசனுக்கு சம்பளம் ரூ.30000, எனக்கு ரூ.5000, ரஜினிக்கு ரூ.2000. ரஜினி என் அம்மாவோடு ஒரு மகன் போன்று நெருக்கமாக பழகக் கூடியவர். ரஜினி என் அம்மாவோடு பேசும்போது, ஒரு நாள் நானும் கமல்ஹாசன் மாதிரி பெரிய ஹீரோவா, பெரிய ஸ்டாராக வர முடியுமா எனக் கேட்பார். என் அம்மாவும் நிச்சயம் வர முடியும்னு சொன்னார்.

ரஜினி இனிமையாக பழகக் கூடியவர், நல்ல மனிதர், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் படைத்தவர். இன்னொருத்தர் கஷ்டத்தில் இருந்தால் அவருக்கு பார்க்க பிடிக்காது. எல்லோரும் சந்தோசமாக இருக்கனும்னு நினைப்பவர். மேலும் மிகவும் திறமைசாலி.

சூட்டிங்கின்போது ரஜினி திடீர்னு காணாமல் போயிடுவார். ஷாட் ரெடியான நிலையில், எல்லாரும் அவரைத் தேடுவோம். அப்ப பாலசந்தர் சார் சொல்லுவாரு, எங்காவது கண்ணாடி இருந்தா பாரு அங்க இருப்பான் அப்படினு சொல்லுவாரு” என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்,   ஸ்ரீதேவி.

- Advertisement -

Read more

Local News