Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

திரிஷாவின் கணவரா? அம்மா கொடுத்த பதிலடி!  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏ எல் சூர்யா என்பவர் ”நடிகை திரிஷாவை லியோ படத்திலிருந்து வெளியேற்றுங்கள். காரணம், நான் அவரை காதலித்து வருகிறேன். எனக்கும் திரிஷாவுக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறுகிறது. விஜய்க்கு என் மீது பொறாமை இருக்கிறது. நானும் திரிஷா மீது கடும் கோபத்தில் இருக்கிறேன்” என்றெல்லாம் சமூவலைதளத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், “நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம். இப்போது எங்களுக்குள் சின்ன சண்டை என்பதால் நாங்கள் பேசிக் கொள்வதில்லை” என்றும் கூறினார்.

ஆனால் இது குறித்து திரிஷா தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வெளியாகவில்லை.

2006 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிரபு என்பவரிடம் நடிகை பத்மப்ரியாவை வைத்து பாரதியார் பாடல்களை ஒளிப்பதிவு செய்தும் தரும்படி கேட்டு பத்மப்ரியாவை தொலைபேசியில் தொந்தரவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக பத்மபிரியா ஏஎல் சூர்யாவின் மீது புகார் அளித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில்தான் திரிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று ஏஎல் சூர்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சிலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் திரிஷாவின் அம்மா, “அந்த நபர்  அப்படி பேசுவதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட வேண்டும். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். இதில் நாம் தலையிட்டால் அந்த விஷயம் மேற்கொண்டு பரபரப்பாகும்” என கூறியிருக்கிறார். இதனை பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News