Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“மியூசிக் ஸ்கூல்” ஸ்ரேயா சரண் ஆல்பம் + பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திரைப்படமான “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து அழகான ரொமான்ஸ் பாடலாக “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” பாடல் வெளியாகியுள்ளது.

மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, ‘மம்மி சொல்லும் வார்த்தை’ எனும் முதல் சிங்கிளின் பெரும் வரவேற்பை அடுத்து, தற்போது , ரொமாண்டிக் பாடலான “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” எனும் அழகிய பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.இளையராஜா இசையமைப்பில் “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” பாடலை, பா விஜய் எழுதியுள்ளார். ஜாவேத் அலி, ஸ்ரேயா கோஷல் இப்பாடலைப் பாடியுள்ளனர். நடன இயக்குநர் ஆடம் முர்ரே இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அழகான ரொமான்ஸ் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி நடித்துள்ளனர்.

மொத்தம் பதினொரு பாடல்களுடன், மியூசிகல் படமாக உருவாகும் இப்படத்தை ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து திரைப்படைப்பாளியாக மாறியிருக்கும் பாப்பாராவ் பிய்யாலா இயக்கியுள்ளார். இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தைக் கூறுவதுடன், “மியூசிக் ஸ்கூல்” திரைப்படம், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.கல்விச் சாதனைகள் மற்றும் கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளின் சமநிலையை வலியுறுத்துகிறது. இப்படத்தின் 11 பாடல்களில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில், கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இசைப் பள்ளியின் மற்ற நடிகர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.வண்ணங்கள் குழைத்த அழகிய காட்சிகளை ஒளிப்பதிவாளர் கிரண் தியோஹன்ஸ் படம்பிடித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி பிலிம்ஸ் வழங்கும் இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. பிவிஆர் இந்தி, தமிழ்ப் பதிப்புகளையும், தில் ராஜு தெலுங்கு பதிப்பையும் 12 மே 2023 அன்று வெளியிடுகிறார்கள்.

மியூஸிக் ஸ்கூல் ஸ்ரேயா பாடல்

- Advertisement -

Read more

Local News