Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘பொன்னியின் செல்வன் -2’ அப்டேட் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’ என்று படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News