Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

குஷ்புவுக்கு ரத்தத்தில் வந்த கடிதங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வாசு இயக்க, பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்து ஹிட் ஆன படம், சின்ன தம்பி.

இந்த படம் குறித்து சமீபத்தில் குஷ்பு பேசும்போது, “சின்னத்தம்பி படத்தில் நான் நேற்று நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை அப்படி ஒரு வரவேற்பு இருந்தது.  அந்த படத்தின்  கிளைமாக்ஸை பார்த்த பலர் பிரபுவிடம் சென்று படத்திற்கு சின்னத்தம்பி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்.ஆனால் படத்தின் கிளைமாக்ஸில் அவள்தான் சின்னத்தாயாக மாறுவது போல இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் அந்தக்காட்சியை மாற்றி விடுங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் பிரபு கேட்கவே இல்லை; படத்தின் வெற்றிதான் முக்கியம் என்று அவர் பிடிவாதமாக இருந்தார். பொண்ணு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாள். அந்த பாட்டால் படம் ஓடுகிறது என்றால் அது போதும் என்று சொன்னார்.

சின்னத்தம்பி படத்தில் நான் ஏற்று நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை.

படம் வெளியான பிறகு எங்கு பார்த்தாலும் என்னை நந்தினி நந்தினி என்று அழைத்தார்கள். ரசிகர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரத்தத்தில் கடிதங்களை எழுதி அனுப்புவார்கள். போட் கிளப் வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். சாலைகளில் பேருந்துகள் வரிசைக்கட்டி நிற்கும்” என்றார்.

 

- Advertisement -

Read more

Local News