பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்ததாகவும், 25 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வருட இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.