Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

திருமணத்திற்கு கெஞ்சிய சில்க் ஸ்மிதா.. கடைசியில் உயிர் போன பரிதாபம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சில்க் ஸ்மிதா 80 மற்றும் 90 களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதாவுக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. படப்பிடிப்பில் கூட யாருடனும் பேச மாட்டார்.  இதனாலேயே அவருடைய சொந்த வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அவருடைய மரணத்திற்கு கூட யாருக்கும் உண்மையான காரணம் தெரியாது.

விதிவிலக்காக, நடன இயக்குநர் புலியூர் சரோஜாவிடம் மட்டும் ஓரளவு பேசுவார் சில்க் ஸ்மிதா.

இந்த நிலையில் ஸ்மிதா குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் சரோஜா.

“ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு புலியூர் சரோஜாவின் மகன் வந்தான்.  அவனைப் பார்த்ததும் சில்க்கிற்கு ரொம்பவும் பிடித்து போனது.  உடனே அனிரிடம் ‘நீ என்னை திருமணம் செய்து கொள், நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

இதை அதிர்ச்சியுடன் என்னிடம் என் மகன் சொன்னான். உடனே  நான் ஸ்மிதாவிடம், ‘அவன் உன்னை விட சின்ன பையன், இப்போதுதான் காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். இனிமேல் தான் அவன் வேலைக்கு எல்லாம் போக வேண்டும். உனக்கு நானே நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வருகிறேன்’ என்று சொன்னேன்.  சில்க் ஸ்மிதா உடனே கோபித்துக் கொண்டார்.  சில நாட்கள் வரை என்னிடம், பேசவில்லை. பின்பு பழையபடி நட்புடன் பழகினார்.

அதன் பின்னர் தான் யாரோ ஒரு டாக்டரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. சில்க் இதையும் என்னிடம் சொன்னார்.  அதிலிருந்து ஒரு வாரத்திலேயே திருப்பதி சென்று இருந்தேன். அப்போதுதான் சில்க் ஸ்மிதா இறந்த செய்தி பேப்பர்களில் வெளியாகி இருக்கிறது. அதைக் கண்டு ரொம்பவும் மனம் உடைந்து போனேன்” என சரோஜா கூறியிருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News