இளையராஜாவை தரக்குறைவாக விமர்சித்ததாக, ஜேம்ஸ் வசந்தனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், “நினைவெல்லாம் நீயடா” படத்தை எழுதி இயக்கி வரும் ஆதிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
“தன்னை இசையமைப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொள்ளும் ஜேம்ஸ் வசந்தன் என்பவர் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், இசைஞானி இளையராஜாவை பற்றி மிகவும் மட்டமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். இசைஞானி இந்தியாவின் அடையாளம். சிறந்த ஆன்மிகவாதி. உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களில் 9 வது இடம் பிடித்து நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். இளையராஜாவுக்கு நிகராக இன்னொருவர் பிறக்கவும் முடியாது.
… இசையில் சிறக்கவும் முடியாது. உலகமே கொண்டாடும் ஒரு இசைஞானியை ஒரு மிகச் சாதாரணமான… மறைமுகமாக ஊழியம் பார்த்து வயிறு வளர்த்து கொண்டிருக்கும் நாகரீகமற்ற ஜேம்ஸ் வசந்தன், மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி மத அரசியல் செய்யும் நோக்கத்துடன் விமர்ச்சித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
சென்னையைத் தாண்டினால் யார் என்றே தெரியாத இவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாய்க்கொழுப்பின் வெளிப்பாடு. யாரோ வீசிய எலும்பு துண்டுக்குத் தான் குரைத்திருக்கிறார்!” –
இவ்வாறு அந்த அறிக்கையில் ஆதிராஜன் கூறியுள்ளார்.