மூத்த சினிமா பத்திரிகையாளர் திரு.ராமமூர்த்தி (வயது 88) நேற்று மாலை குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
சுதேசமித்திரன் தினசரி பத்திரிகையில் 5 ஆண்டு காலம் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பிறகு, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பேற்றார். தொடர்ந்து 23 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பிறகு ஜெயா டி.வி.யில் 5 ஆண்டு காலம் ‘தேன் கிண்ணம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.
தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உட்பட பல விருதுகளை ராமமூர்த்தி பெற்றுள்ளார்.
அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.
மேலும் விவரங்கள் அறிய:
திரு. கோபாலன் ( சகோதரர் ) : 98400 28716