Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“சினிமாவில் போதைக் காட்சிகள் வேண்டாம்!”: இணை ஆணையாளர் ரம்யா பாரதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் 300-க்கும் அதிகமான குறும்படங்கள் பங்கேற்ற நிலையில், அவற்றில் நான்கு சிறந்த படங்களை தேர்வு செய்து, விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியிடப்பட்டது.இவ்விழாவினில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ், திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில்,  சென்னை பெருநகர காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி பேசுகையில், “திரைப்படம் மிகச் சக்தி வாய்ந்தது இனி வரும் காலங்களில் உங்கள் படைப்புகளில் போதைப்பொருளைப் பயன்படுத்தாதீர்கள். நமது மாண்புமிகு முதல்வரின் சொல்லுக்கிணங்க போதைப்பொருள் எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் யாருக்கும் வேண்டாம் என்ற உறுதிமொழியை ஏற்போம். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

- Advertisement -

Read more

Local News