Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“சில்க் ஸ்மிதாவுக்கும் எனக்கும் போட்டியா?”: மலரும் நினைவுகளில் ஷகிலா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஷகிலா 80 களில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களாக சினிமாவில் ஆக்டிவாக இல்லாத இவர்  யு டியுப் ஒன்றில், பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

தற்போது இவர் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

70களில் ஆரம்பித்து கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய பயோ பிக் ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்னும் பெயரில் வெளியாகி இருந்தது. அதில் ஷகிலா கதாபாத்திரமும் வந்தது.

இது குறித்து அவர், “அந்த திரைப்படத்தில் சில்க் மார்க்கெட் கொஞ்சம் சரியும் நேரத்தில் நான் அவருக்கு போட்டியாக வந்திருப்பதாக வசனமும், அது சம்மந்தப்பட்ட காட்சிகளும் வரும். அது பொய்.  முதலில் சில்க் ஸ்மிதாவிற்கு தங்கையாகவே நடித்தேன். எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை.

உண்மையை சொல்ல போனால் சில்க்கின் மார்க்கெட் குறைந்த ஒரு சில வருடஙக்ளுக்கு பின்பு தான் எனக்கு மலையாள திரைப்பட உலகில் வாய்ப்பு கிடைத்து.  என்னை தவறாக காட்டிய அந்த படக்குழு மீது கடும் கோவத்தில் இருக்கிறேன்” என ஷகிலா கூறியிருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News