Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

மணிரத்னம் – இளையராஜா கூட்டணி பிரிந்தது ஏன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இளையாஜா இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே கவனத்தை ஈர்த்தவை. முதன் முதலில் மணிரத்னமும் இளையராஜாவும் சேர்ந்து பணிபுரிந்த படம் ‘பல்லவி அனு பல்லவி’ என்ற கன்னட திரைப்படம். இதுவே மணிரத்தினத்தின் முதல் படம். அதன் பிறகு மலையாளத்தில் மணிரத்னத்தின் இரண்டாவது படத்தில் சேர்ந்து பணிபுரிந்தனர். மணிரத்னத்திற்கு தமிழில் முதல் படமாக அமைந்தது ‘பகல் நிலவு’ திரைப்படம்.

அந்தப் படத்தில் அமைந்த ‘பூ மாலையே ’என்ற பாடல் சொல்ல பெரிய ஹிட் ஆகியது.

அடுத்தடுத்து, இதய கோயில், மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அஞ்சலி, ‘தளபதி’ ஆகிய படங்களில் பணியாற்றினார்கள். ஆனால் தளபதி படமே இவர்களது கூட்டணியின் இறுதிப்படமாக அமைந்தது.

இது குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், தனது டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் கூறும்போது, “தளபதி படத்தின் போதுதான் இருவருக்கும் இடையில் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே மணிரத்னம் – இளையராஜா கூட்டணி முறிந்தது. அதன் பிறகு தான் மணிரத்தினத்தின் ரோஜா படத்தில் ஏ.ஆர். ரகுமான் அறிமுகமானார். தமிழ் திரையுலகின் இசை வேறொரு போக்கிற்கு சென்றது. மணிரத்னம் , ரகுமான் கூட்டணியில் புதுவித இசையை மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர்” என்றார் சித்ரா லட்சுமணன்.

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள, touringtalkies யு டியுப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News