Wednesday, November 20, 2024

“எல்லோருக்காகவும்..!”: ஸ்ருதியின் பிறந்தநாள் வேண்டுதல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சுருதிஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில்  வெளியிட்டு உள்ளார்.

மேலும், “என் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளே கிடையாது. குடும்பத்தினர்,  நண்பர்கள், ரசிகர்கள் அனைவரிடம் இருந்தும் நிறைய அன்பை பெற்று வருகிறேன். ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளில் சில தீர்மானங்களை எடுப்பேன்

இந்த வருடம் மட்டும் எனக்காக மட்டுமின்றஇ, அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டேன். எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை கழிக்க வேண்டும். விரும்பியதெல்லாம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டினேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவரவருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வயது ஏறுகிறது. அந்த அனுபவத்தில் புத்திசாலி ஆகிறோம். என்னை சுற்றி இருக்கும் உலகத்தில் எத்தனையோ புத்திசாலிகளுடன் இருப்பதற்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News