Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ரஜினி கடும் எச்சரிக்கை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அனுமதி இன்றி தனது பெயர் புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி தரப்பில் இருந்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில், “அனுமதியின்றி ரஜினிகாந்தின் குரல், பெயர், புகைப்படம் ஆகியவற்றை வணிக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

பல்வேறு நிறுவனங்கள் ரஜினிகாந்தின் அனுமதி இன்றி அவரின் குரல், புகைப்படங்கள் மற்றும் பெயரை பயன்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
.

- Advertisement -

Read more

Local News