ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில், கமல் நடித்த ஆளவந்தான் படம், ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்து உள்ளார்.
2001ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க மனிஷா கொய்ராலா, சரத்பாபு, ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். என பல நடிகர்கள் நடித்திருந்தனர். சங்கர் ,ஏஷான்,லாய் கூட்டணி இசை அமைத்திருந்தது.
தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் வெளியான இப்படம் ஸ்பெஷல் எஃபெக்ட் பிரிவில் தேசிய விருதை பெற்றது.
தவிர இத்த படத்தில் அதிநவீன டெக்னாலஜியாக கருதப்பட்ட மோஷன் கண்ட்ரோல் கேமரா பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த டெக்னாலஜி முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட படம் ஆளவந்தான் தான். –
பெரும்பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றியாடவில்லை.
இந்நிலையில்தான் படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். மார்ச் இறுதியில் படம் வெளியாகும் என திரைவட்டாரத்தில் தகவல் உலவுகிறது.
படத்தை கமல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.