Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா  எதையாவது ஏடாகூடமாக பேசி, சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.  சமீபத்தில் கூட, தனது ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் சக்சஸ் மீட்டில் மது கோப்பையுடன் நடிகை ஹனிரோசுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு கண்டனத்துக்கு ஆளானார்.

 அந்த நிகழ்ச்சியில் இன்னொரு  பிரச்சினையையும் கிளப்பிவிட்டார். அப்போது  பேசிய அவர், தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளுள் ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைக் குறிப்பிட்டு பேச்சுவழக்கில் மரியாதை குறைவாகப் பேசிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையடுத்து,  அக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரன்கள் நாகசைதன்யா மற்றும் அகில் அக்கினேனி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக இருவரும் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நந்தமுரி தாரக ராமராவ், அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரை தரக்குறைவாக பேசுவது  நம்மை நாமே இழிவுபடுத்துவதற்கு சமமானது” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

தவிர தெலுங்கு திரைப்பட ரசிகர்களும் பாலகிருஷ்ணா கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் இன்னமும் மன்னிப்பு கேட்கவில்லை.

- Advertisement -

Read more

Local News