Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“பிக்பாஸ் செய்தது தவறான செயல்!”: விளாசிய சீசன் 6 நடிகை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசின் டைட்டில் வின்னராக தேர்வானதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து  வருகின்றனர்.  இது போன்ற தருணங்களில், இப்போட்டியில் கலந்துகொண்டவர்கள் மவுனமாகவே இருப்பார்கள்.

ஆனால் இம்முறை,  விஜே மகேஸ்வரி மட்டும் தைரியமாக தனது கருத்தை சமூகவலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

அவர், “அசீம் சக போட்டியாளர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொண்டார்.  விக்ரமன் மற்றும் ஆயிஷா இருவரையும் ஒருமையில் பேசி அதிரவைத்தார். அவருக்கு நிச்சயம் ரெட் கார்ட் கொடுக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கமல் அவருக்கு எச்சரிக்கை மட்டுமே கொடுத்தார்.

கடைசியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இது மிகவும் தவறு. இது பிக்பாஸ் செய்த மட்டமான செயல்” என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்  விஜே மகேஸ்வரி.

அவரது கருத்தை சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News