Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

சிவாஜியின் நடிப்பு ரகசியம்! அவரே சொன்ன தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -





நடிகர் திலகம் என்றாலே நடிப்புக்கு இலக்கணம். இதற்கான காரணத்தை அவரே கூறி இருக்கிறார்:

“சாதாரணமாக வெளியில் சந்திக்கும் மனிதர்களை நான் அசால்ட்டாக நினைத்து பார்க்க மாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி, எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, அவர்களை பார்க்கும் போது மிகவும் கூர்ந்து கவனிப்பேன். எல்லாரையும் அப்படித்தான் பார்ப்பேன்.

சிறிது நேரம் பார்த்தாலும் அவர்களின் நியாபகங்கள், நினைவுகள் , தோற்றங்கள், என என் மனதில் அச்சாணி போல் பதிந்து விடும். அது போலத்தான் காஞ்சி பெரியவரை சந்திக்க நேர்ந்தது. அவரின் தோற்றத்தை கூர்ந்து கவனித்த நான் அவர் எப்படி பார்க்கிறார், எப்படி நடக்கிறார் என்று உற்று நோக்கினேன். அது எப்பொழுதும் போல சந்திப்பாகத்தான் இருந்தது.

 

ஆனால் அதுவே நான் நடித்த அப்பர் கதாபாத்திரத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் அவரின் தாக்கம் தான்” என்று சிவாஜி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

- Advertisement -

Read more

Local News