விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் நடிக்கும் ‘ஃபார்ஸி’ இணையத் தொடர் வரும் பிப்ரவரி 10ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ஃபேமிலி மேன்’ இணைய தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்திருந்த இந்த தொடரை ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர். இவர்கள் இணைந்து அடுத்து இயக்கும் புதிய இணைய தொடர் ‘ஃபார்ஸி’.
ஏற்கெனவே வெளியான இத்தொடரின் போஸ்டரில், துப்பாக்கியை வைத்துக்கொண்டு வில்லத்தனமான தோற்றத்துடன் விஜய் சேதுபதி காட்சி அளித்தார். அதேபோல ஷாஹித் கபூர் ரக்கட் பாய் தோற்றத்துடன் நின்றிருக்கும் மற்றொரு போஸ்டரும் வெளியானது.மேலும் இத்தொடரில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எட்டு எபிசோடுகளைக் கொண்ட இத்தொடர் நகைச்சுவையுடன் கூடிய க்ரைம் – த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.