தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகை மும்தாஜ், நிஜமாகவே கதறி அழுதார்.
சில வருடங்களுக்கு முன்பு வரை, கவர்ச்சி நடனத்தில் – நடிப்பில் தூள் பறத்தியவர் மும்தாஜ். பிறகு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிறகு திரையுலகுக்கு சிறிது இடைவேளை விட்டார்

இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு தான் சென்றதை தனது சமூகவலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
அதில், “ இந்த பூமியில் எனக்கு மிகவும் பிடித்த இடமான மெக்காவிற்கு வந்திருக்கிறேன். இதை என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன். என்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
நான் அனைத்து மக்களுக்காகவும் பிராத்தனை செய்கிறேன்” என்றவர், “இறைவா.. நாங்கள் செய்யும் குற்றங்களை மன்னியுங்கள், எங்களுக்கு இன்பமான வாழ்க்கையை தாருங்கள். எங்கள் பாவங்களை மன்னியும்” என கண்ணீர் மல்க பிராத்தனை செய்த காட்சி இந்த வீடியோ இருக்கிறது. அவரது ரசிகர்கள் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.