விஷ்ணு விஷால் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பவர். அவர் நடித்த நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவை.
தற்போது இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் ராட்சசன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். அப்போது எனது சொந்த வாழ்க்கையில் பிரச்சனை நடந்து கொண்டிருந்தது. எனக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருக்கும். . ஷூட்டிங் முடிந்து ஒரு பாலத்தில் நான் போனில் பேசி கொண்டிருந்தேன்.
ரசிகர் ஒருவர் என்னுடன் செல்பி எடுக்க கேட்டுக் கொண்டே இருந்தார். பிரச்சனை பற்றி போனில் பேசிக் கொண்டிருந்ததால் என்னால் முடியவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து நான் போனில் பேசுவது போல் போட்டோ போட்டு அந்த ரசிகர் இவன் என்ன பெரிய நடிகரா… ஒரு போட்டோ கேட்டேன் கொடுக்கலா’’ என்று ட்வீட் ஒன்று போட்டிருந்தார்.
எனக்கு அந்த ட்வீட் மனதை காயப்படுத்தியது. என் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் இப்படி செய்து விட்டாரே என வருத்தப்பட்டேன் என்றார் விஷ்ணு விஷால்.