நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வெளியான திரைப்படம், நாய் சேகர். மிகுந்த எதிர்பாப்புக்கு இடையே வெளியான இப்படம், தோல்வியைத் தழுவியது.
இது குறித்து, பிரபல காமெடி நடிகரான சிங்கமுத்து, ஒரு பேட்டியில், “நாய் சேகர் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த படத்தை பார்த்தவர்களின் முகத்தை என்னால் பார்க்க சகிக்கவில்லை. பாவம், மோசமான அந்தப் படத்தைப் பார்த்து நொந்துபோய் விட்டார்கள் ரசிகர்கள்.
‘இந்த படம் வெளிவந்தால் இங்கிருக்கும் காமெடியன்கள் எல்லாம் ஒழிந்துபோவார்கள்’ என ஆணவத்துடன் வடிவேலு கூறினார். தன்னுடன் நடித்த சக காமெடி நடிகர்களை எல்லாம் மாற்றிவிட்டார். ஆனால், ‘இந்த படம் ஓடாது’ என படம் வெளியாகும் முன்பே சொன்னேன்.   பத்து பேர் சேர்ந்து ஒரு தேரை இழுக்கவேண்டும். தனியாக இழுத்தால் எங்கயாவது சுளுக்கு பிடித்துவிடும்” எனவும் வடிவேலுவை சிங்கமுத்து.
வடிவேலுவும் சிங்கமுத்துவும் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் கலக்கியிருக்கின்றனர். எனினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நில தகராறில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது


 
