1980 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மனோரமா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி அடித்த படம் “பில்லா”.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மனோரமாவை பாராட்டும் விதமாக எடுக்கப்பட்ட ஒரு விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், “பில்லா” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை தெரிவித்தார்.
“அந்த படத்தின் பாடல் காட்சி படமாகிக் கொண்டு இருந்தது. பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர், ‘பரவாயில்லையே, பைத்தியம் நல்லா டான்ஸ் ஆடுதே’ என கேலி செய்தார். நான் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் அருகில் இருந்த மனோரமா ஆச்சி பொங்கி எழுந்துவிட்டார்.
‘யாரை பைத்தியம்ன்னு சொன்ன.. போடா. அந்த தம்பி எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடிட்டு இருக்காரு’ என்று கடுமையாக பேசிவிட்டார். அதோடு, ‘அந்த ஆளை வெளியில் அனுப்பினால்தான் இங்கே ஷுட்டிங் நடக்கும்’ என்றும் கூறிவிட்டார்.
அதன்படி அந்த நபரை படக்குழுவினர் துரத்தி அனுப்பினர்” என்ற ரஜினிகாந்த், “ஒருவாட்டி அரவணைச்ச கை, நீங்க ஆயிரம்வாட்டி அடிச்சா கூட ஏற்றுக்கொள்வேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.