Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘ரம்மிக்கு ஆதரவு: ரம்முக்கு எதிர்ப்பா?’ : ‘நாட்டம’ சரத்துக்கு குடிகாரர்கள் வி. சங்கம் எதிர்ப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சரத்குமார்,  ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிப்பது பல தரப்பிலும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து பேசிய சரத்,  “ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாடக் கூடாது என்று நான் சொன்னால் மட்டும் கேட்டு விடுவார்களா” என்றவர், “மதுதான் ஆபத்து.. அதை தடை செய்ய வேண்டும்” என்றார்.

இவரது கருத்துக்கு, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அமைப்பின் தலைவர் செல்லப்பாண்டியன், “நாட்டாம…  ‘ரம்’முக்கு ஆதரவா நடிக்க விளம்பரம் தரமாட்டேங்கிறாங்களே என்ற ஆதங்கமா உங்களுக்கு? அதனாலதான் எதிர்க்கிறீர்களா?

டாஸ்மாக்கு சரக்கு 50 ஆண்டுகால வளர்ச்சியில் உயர்ந்து நிற்கிறது. இதற்கு விளம்பரம் தேவையில்ல. ஆகையால், நாட்டம, ரம்மோடு மோதாதீங்க…” என்று அறிக்கை விட்டுள்ளார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Read more

Local News