நடிகை வடிவுக்கரசி தயாரிப்பாளரும்கூட. அன்னை என் தெய்வம் என்ற படத்தை உருவாக்கியது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.
அப்போது, “ இந்த படத்தில் நடிக்க ஒரு சில ஹீரோக்களை அணுகினேன். யாரும் அமையவில்லை. அப்போதுதான் விஜயகாந்த் நினைவுக்கு வந்தார். அவரிடம் சென்று கதை சொன்னோம். உடனடியாக ஒப்புக்கொண்டார்.
அதன்பிறகு அவருடன் நாயகியாக நடிக்க நடிகை ராதிகாவிடம் பேசினேன். அவரோ, ‘ அந்த கருப்பனுடன் நான் நடிக்க மாட்டேன்.. உங்களுக்கு வெற ஹீரோவே கிடக்க வில்லையா’ என்று கேட்டு மறுத்துவிட்டார்.
பிறகு மாதுரி நடித்தார்..
ஆனால் பின்னாட்களில் விஜயகாந்த் – ராதிகா ஜோடியாக பல படங்களில் நடித்தனர்.. படங்களும் ஹிட் ஆகின” என்றார் வடிவுக்கரசி.
அதுதான் சினிமா!