டி.ராஜேந்திரன் இயக்கத்தில் என் தங்கை கல்யாணி திரைப்படம் மூலம் சினிமாவில் கால் பதித்தார் நடிகர் வடிவேலு.
அதன் பிறகு முடிசூடா நகைச்சுவை நடிகராக சினிமாவில் வைகைபுயல் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார். கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து ஹீரோவானார்.
சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வடிவேலு நான் சினிமாவில் நிறைய நடிகர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு நடிகரைப் பார்த்து மிரண்டு இருக்கிறேன். ’மாநகர காவல்’ என்ற படத்தில் கொடூர வில்லனாக நடித்திருப்பார் ஆனந்தராஜ். அந்த படத்தில் எனக்கும் அவருக்கும் சின்ன பிரச்சனை என்னை தூக்கிட்டு வரச் சொல்வார்.
நான் எவ்வளவு சொல்லியும் நீ திருந்தாலே பார்த்தியா என்பார். நீ என்னை இருக்கிறதிலேயே குறியா இருக்கே ..ஆனா உன்னை திருப்பி அடிப்பேனு மட்டும் உன் கனவில் கூட நினைத்திடாதேனு நான் சொல்வேன்.
அந்த படத்தில் என்னை மிரள வைத்து விட்டார் அண்ணன் ஆனந்தராஜ் என்றார் வடிவேலு.