இயக்குனர் பாக்கியராஜ் நடிகர், தயாரிப்பாளர், பத்திரிக்கையாளர் இசையமைப்பாளர் பன்முகத் திறமை கொண்டவர். இவர் ஒரு நிகழ்ச்சியில் கோவை சரளாவுக்கு தனக்குமான அறிமுகம் குறித்து பேசினார்.
முதலில் சினிமாவுக்கு வந்தது கோவை சரளா அக்காதான் நடிக்க வந்தார். அவருடன் சின்ன பிள்ளையா ஒரு எட்டு வயது இருக்கும் என் கை பிடித்து கொண்டு கூடவே வரும்.
அப்போது நான் ஒரு கதையை அந்த நிறுவனத்துக்கு கொடுத்து விட்டு காத்திருந்த சமயம். நான் எங்கே போனாலும் சரளா என் கூடவே வரும். நான் சொன்னேன் உன் அக்கா தாமதமாகத்தான் சினிமாவுக்கு வந்திருக்கார். ஆனா நீ நல்லா கலரா,அழகா இருக்கே நீ சினிமாவில் வாய்ப்பு தேடு சீக்கிரம் நடிக்க வந்துருவேன்னு சொன்னேன். இப்போது நல்ல நடிகையாக பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்றார் பாக்கியராஜ்.